மதுரை மேயரும் கல்லும் ஒன்று...! பா.ஜ.க மாவட்டத் தலைவர் டாக்டர்.சரவணன் கடும் தாக்கு...!

 மதுரை மாநகர் பா.ஜ.க சார்பாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் தலைமையில் மதுரை மாநகராட்சி மேயரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக மேயரின் உதவியாளரிடம் அனுமதி கோரி, அனுமதியும் கிடைத்தும் மேயரை பார்க்கவிடாமல் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பிதாக டாக்டர்.சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேயர்யிடம் மனு அளித்ததற்காக வந்திருந்தோம் எங்கள் அனைவரையும் வெளியவே காக்க வைத்துவிட்டு திமுக கவுன்சிலர்களை மட்டும் உள்ளே அனுமதித்து பேசிய மேயர் எங்களை மட்டும் நீண்ட நேரம் காத்திருந்தும்  சந்திக்க உள்ளே அனுமதிக்கவில்லை.

முன்னாள்  மதுரை மேயர் முத்து 10 வருடங்களாக மதுரையில் சிறப்பாக பணி செய்தவர். அதுமட்டுமில்லாமல் நீண்டகாலம் தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டவர் அப்பேர்ப்பட்ட அவருக்கு மதுரை மாநகராட்சி வளாகத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த வேளையில் மாநகராட்சி வளாகத்திலேயே முன்னாள் மேயர் முத்துவிற்கு சிலை வைக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக வந்திருந்தோம் எங்களை புறம்தள்ளி உள்ளார் மதுரை மேயர். 

ஏற்கனவே தமிழக முதல்வர் மதுரைக்கு வந்தபோது மேயர் மட்டும் நேரில் சென்று அவரை வரவேற்கவில்லை அதுமட்டுமின்றி மேயரை மதுரை மக்கள் இதுவரை  யாரும் பார்த்ததில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளது. கல்லும் மேயரும் ஒன்றுதான் அப்படித்தான் அவருடைய செயல்பாடுகள் உள்ளது அதனால் தான் மதுரை மாநகராட்சி பொன்விழா நினைவுத் தூணிற்க்கு சால்வை அணிவித்து  மனுவை கொடுத்து எங்கள் எதிர்ப்பை காட்டி உள்ளோம். 

அதேபோல் தேசத்தின் நான்காம் தூண் என போற்றப்படும் பத்திரிக்கையா ளர்களை திமுகவை சேர்ந்தவர்கள் தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் மதுரை மேயர்  யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளார் என்று தெரியவில்லை தனித்து சுதந்திரமாக மக்களுக்கு பணி செய்யும்  ஒரு மேயர் மதுரை மாநகருக்கு தேவை  இன்று எங்களை காக்க வைத்து திருப்பி அனுப்பி மதுரை மேயரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என கூறினார். இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், SSD.மனோகரன், கீரைத்துரை குமார், மாவட்ட பொதுசெயலாளர் துரை பாலாமுருகன், மாவட்ட பொருளாளர் மோகன்குமார், மாவட்ட செயலாளர் வினோத், செண்பக பாண்டியன், வடமலையான்,  கார்த்திக், சரவணபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்