உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி உசிலம்பட்டி பகுதி பொதுமக்களிடம் மனுகள் வாங்கப்பட்டது.


உசிலம்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர்  அலுவலகத்தில் உசிலம்பட்டி பீர்க்கா பகுதிகளுக்கு ஜமபந்தியில் பொது மக்களிடம் 370 மனுக்கள்  வாங்கப்பட்டது.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் வட்டாட்சியர் விஜயலட்சுமி சமூக நலத்துறை பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன் மண்டல துணைத் வட்டாட்சியர் கோமதி  தலைமை நில அளவர் லோகேஷ்  வருவாய் ஆய்வாளர் சுந்தரப் பெருமாள் ஆதிதிராவிடர் வட்டாட்சியர் தமிழ் செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு 370 மனுக்களை பெற்றனர்.

இம்முகாமில் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் அதிகமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாதை உள்ள நிலையில் கடந்த காலங்களில் பாலம் அமைக்கப்பட்டு சென்று வந்தாகவும், தற்போது அகல ரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்ட பின் இந்த பாலம் இடிக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரயில்வே பணிகள் முடிவடைந்து தற்போது ரயில் சேவையும் துவங்கியுள்ள நிலையில் இந்த பாதையின் வழியாக இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் முறையிட்டு தாங்கள் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அல்லது பாதை அமைத்து தர வேண்டும் என சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 




கருத்துரையிடுக

0 கருத்துகள்