விளாங்குடியில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா


 சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை விளாங்குடியில் பிள்ளைமார் உறவுமுறை மற்றும் ஞானம் பல் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது 

முகாமில் விளாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மருத்துவர் களிடம் ஆலோசனை பெற்றனர். 

பொதுமக்களுக்கு பல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதுடன், பல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கமளித்தனர். 

முகாமில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை தொடர் பான வழிகாட்டுதல்களை வழங்கினர். 

இதனைத்தொடர்ந்து, பிள்ளைமார் உறவுமுறை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாட்டின் விடுதலைக்காக வ.உ.சிதம்பரனார் ஆற்றிய ஈடில்லா தியாகம், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மற்றும் தமிழர்களின் உரிமைக்காக அவர் மேற் கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக் கப்பட்டது. 

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்